எங்களால்தான் டீக்கடைக்காரர் பிரதமரானார்- கார்கே கடும் தாக்கு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 04:54 pm

a-chaiwala-like-him-could-become-prime-minister-because-we-preserved-democracy-mallikarjun-kharg

70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை காங்கிரஸ் பாதுகாத்ததால்தான் டீ கடைக்காரர் பிரதமரானார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை ஜாமீன் வண்டி என விமர்சித்தார். மேலும் கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது? காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய ஆட்சியாளர்கள் செய்த தவறுக்காக, அவர்களில் பலர் ஜாமினில் வெளியில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனே, கடந்த 70 வருடங்களாக காங்கிரஸ் ஜனநாயகத்தை பாதுகாத்தது. அதனால்தான், டீக்கடைக்காரர் பிரதமராகியுள்ளார். காங்கிரஸ் ஒரு குடும்ப அரசியல் என்று விமர்சினம் செய்கின்றனர். ஆமாம், உண்மையில் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம்தான், அதில் நாங்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் பிரதமர் விவசாயிகளுக்காக ஏதுவுமே செய்யைல்லை. மோடி தலைமையிலான அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டால் மக்களின் வாழ்வு வசந்தமாகும்" என தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close