Breaking News: தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி - அமித்ஷா உறுதி

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 07:43 pm

bjp-will-win-in-the-2019-parliament-election-says-amitshah

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பேசி வருகிறார். அதை எச்.ராஜா மொழி பெயர்த்து வருகிறார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:  "நாடு முழுக்க 11 கோடி  உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க வெற்றிபெரும். 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை  4 ஆண்டுகளில் மோடி அரசு செய்திருக்கிறது. முந்தைய அரசுகளை விட தமிழகத்திற்கு அதிக நிதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. நீர்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ திட்டம், சென்னை மோனோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2017ம் ஆண்டு வறட்சிக்காகவும், வர்தா புயல் நிவாரணத்திற்காகவும் நிதி ஒதுக்கப்பட்டது. இதுபோன்று தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 1445 திட்டங்கள் மூலம் ரூ. 3067 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி செய்தனர். எதிர்ப்பாளர்களே தமிழகத்தில் 2019 மார்சுக்குள் பா.ஜ.க எங்கே இருக்கிறது என பார்ப்பீர்கள்! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு ஊழல் புகார் கூட இல்லை. சாதி வாதம், வாரிசு அரசியல், ஊழலை மத்திய பாஜக அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்கவேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு” என கூறினார்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close