ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மீண்டும் மனு

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 08:45 pm

petition-against-rajinikanth

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிய கோரி ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெறுபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் காவல்துறையினரை தாக்கியதாலே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருந்தனர். அவர்களே பொதுமக்களை தவறான பாதையில் கொண்டு சென்றதாகவும் விமர்சித்தார். போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதி என இழிவாக பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதியக்கோரி ஓசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இது தொடர்பாக கீழ் நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி இன்று ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிலம்பரசன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close