லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது! - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 04:58 pm

kochadaiyan-issue-sc-dismisses-latha-rajiniakanth-s-petition

டெல்லி: கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய  உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

கோச்சடையான் பட விவகாரத்தில் ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.14.90 கோடியில் ரூ.6.90 கோடியை லதா ரஜினிகாந்த் இன்னும் வழங்கவில்லை. மீதத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என லதா ரஜினிகாந்த்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோச்சடையான் பட தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தது. அதில், மீதமுள்ள தொகையை ஆட் பீரோ நிறுவனத்திற்கு மீடியா ஒன் நிறுவனம் செலுத்தும், எனவே இதற்கும், லதா ரஜினிகாந்திற்கும் சம்மந்தம் இல்லை என நீதிமன்றம் கூற வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்த தொகையை செலுத்த முடியாது என லதா ரஜினிகாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என லதா ரஜினிகாந்த் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதிலும் உச்ச நீதிமன்றம் கைவிரித்துவிட்டது. லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய  உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close