விவாதத்துக்கு நான் தயார்... நீங்க ரெடியா? - அன்புமணியை சீண்டும் சிம்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jul, 2018 06:32 pm
actor-simbu-released-new-video

திரைப்படங்களில் வெளிவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது இதுகுறித்து விவாதிக்க நான் ரெடி நேரத்தை இடத்தையும் சொல்லுங்கள் என அன்புமணிக்கு நடிகர் சிலம்பரசன் சவால் விடுத்துள்ளார். 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று மதியம் வெளியிடப்பட்டது. சிம்பு - வெங்கட் பிரபுவின் இந்தப் படமும் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்பதை டைட்டிலே உறுதி செய்துள்ளது. இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கீர்த்து சுரேஷ் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதில், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாநாடு திரைப்படம் நல்லப்படியாக வரும் என நம்புகிறோம். மாநாடு படத்தில் அரசியல் இருக்கிறது. நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் நான் நடிக்கும் படங்களில் அரசியலை பற்றி பேசுவேன் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன். அதற்கான தேவையும் தற்போது இல்லை. புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் படத்திற்கு பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பியிருக்குறது. பாபாவில் தொடங்கி சர்க்கார் வரை தொடர்ந்து பல படங்களுக்கு எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். 

கடந்த 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் புகைப்பிடிப்பதற்கு எதிராக பேசினார். மேலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை விஜய் நிறுத்த வேண்டும் எனக் கூறினார். இதற்கு நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸின் கோரிக்கையை ஏற்று இனிமேல் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதி கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றத் தவறிவிட்டதாக அன்புமணி ட்விட்டரில் விஜயை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸுடன் புகைப்பிடிக்கும் காட்சிகள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க நான் தயார். அவர் சர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து தற்போது நான் ஏதாவது தெரிவித்தால் அது தவறாகிவிடும். ஆனால் அன்புமணி அங்கிள் கேட்கும் அனைத்து கேள்விகளையும் என்னிடம் நேரில் கேட்டால் அனைத்து கேள்விக்கும் நான் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு அவர் ஒகே சொன்னால், எப்போது, எங்கே, எந்த நேரம் இதுகுறித்து விவாதிக்கலாம் என கூறினால், நான் நிச்சயமாக பதிலளிப்பேன்” என தெரிவித்துள்ளார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close