முட்டை ஊழலில் முக்கிய அரசியல்வாதிகள்- டிடிவி ட்விஸ்ட்

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jul, 2018 01:31 am

ttv-dhinakaran-speaks-about-christy-it-raid

தமிழக அரசுக்கு முட்டை மற்றும் சத்துமாவு வழங்கும் கிருஸ்டி நிறுவனத்தில் கடந்த 5 நாட்களாக வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களில் முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,“தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தினம் ஒரு பொய் சொல்கிறார் . அதே போல் ஆர்.கே.நகர் தேர்தலில் காவல்துறை உதவியுடன் பணம் பட்டுவாடா செய்ததை தமிழக மக்களே அறிவார்கள்.  நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா சட்டப்பூர்வமாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சுதந்திரதினத்துக்கு முன்பாக நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத ஆட்சி தொடர்வதற்கு காரணமே மத்திய அரசு தான் காரணம். தமிழகத்தில் ஊழல் பெருகி உள்ளது எனக்கூறும் அமித்ஷா ஊழல் அடித்தளமாகவும், பெரும்பான்மை இல்லாததாகவும் இயங்கும் அரசை கலைக்க மத்திய அரசு முன்வராதது ஏன்?  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் சேர்ந்து கபட நாடகம் ஆடுவதாக வைகோ சொன்ன கருத்தில் உண்மை இருக்க வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடுவதற்கு முன் உளவுத்துறை என்ன செய்தது. உளவுத்துறை தூங்கி விட்டதா? 

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற முட்டை ஊழலை வைத்து தான் பாஜக தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் உள்ளதாக கூறி இருக்கிறார். தமிழக அரசுக்கு முட்டை மற்றும் சத்துமாவு வழங்கும் கிருஸ்டி நிறுவனத்தில் கடந்த 5 நாட்களாக வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களில் முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது” என சூசனமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close