தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பு!!

  சுஜாதா   | Last Modified : 11 Jul, 2018 05:31 am

amil-nadu-pondicherry-chance-for-heavy-rain

வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ''வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

தெற்கு கர்நாடகாவின் உட்பகுதிகள், தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது'' என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close