கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:49 pm

rs-1-350-crore-tax-evasion-found-christy-friedgram-industry-says-it

சென்னை: கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கான பொருட்களை வழங்கி வருகிறது. அந்நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரையடுத்து, கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 15 குழுக்களாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரண்டாவது நாள் சோதனையில் ரூ. 4 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஏகப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில், 5ம் நாளன்று, கிறிஸ்டி நிறுவனம் முறைகேடாக ரூ. 245 கோடி வங்கியில் டெபாசிட் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

வருமானவரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அக்னி குழுமம் என சேர்த்து ரூ.1,350 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close