டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி...நேர்முகத் தேர்வில் புதிய முறை!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 02:11 pm

new-method-introduced-in-tnpsc-interview

டி.என்.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முக்கிய அரசுப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் சில உயரிய பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன் நேர்முகத் தேர்வும் நடைபெறும். நேர்முகத்தேர்வில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் இருப்பர். நேர்முகத் தேர்வுக்கு வரும் தேர்வர்களின் என்ணிக்கையை பொறுத்து குழுக்கள் அமைக்கப்படும். முதல் குழுவில் தலைவர் இடம்பெறுவார். 

தற்போது நேர்முகத் தேர்வு முறையில் நடக்கும் குளறுபடிகளை தடுக்க புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.அதன்படி, எந்தக்குழுவில் நேர்முகத்தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதை தேர்வர்கள் தான் முடிவு செய்வர். அவர்கள் உள்ளே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக குலுக்கல் முறையில் தனக்கான குழுவை தேர்வு செய்துகொள்வர். அதேபோன்று எந்த ஷிப்ட்டுக்கு எந்த குழு செல்ல வேண்டும் என்பதும் அங்குள்ள பிரதிநிதிகள் மூலமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுவர். இந்த முறை மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close