ஏ.டி.எம் கார்டு மோசடி: தேடப்பட்டு வந்த குற்றவாளி சந்துருஜி பிடிபட்டார்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 08:46 am
atm-card-scam-the-convict-caught-by-cbcid-police

போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து பண மோசடி செய்த வழக்கில் கடந்த 2  மாதங்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த சந்துருஜி 3 புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலமாக பணம் எடுக்கப்பட்டு வருகிறது என போலீசாருக்கு புகார் வந்தது. விசாரணையில், பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் பாஸ்வேர்டை ஸ்கிம்மர் கருவி பொருத்தி கண்டறிந்து, பின்னர் போலி  ஏ.டி.எம் கார்டு தயாரித்து வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான பணம் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இத்துட் தொடர்பாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சந்துருஜி. தலைமறைவான இவரை தேடப்படும் நபராக சி.பி.சி.ஐ.டி அறிவித்தது. சந்துருஜியின் தம்பி மணிசந்தர், பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான் உள்பட 15 பேர் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 80 நாட்களாக தேடப்பட்டு வந்த சந்துருஜி நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close