• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

Breaking: நிர்மலா தேவியின் வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 12:07 pm

nirmaladevi-case-should-be-finished-within-6-months

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கீழ் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் செல்போனில் பேசிய ஆடியோ ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, கடந்த ஏப்ரல் 17ம் தேதி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து  அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

அதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்தில் அவரின் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், நிர்மலா தேவியின் வழக்கை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழவை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற செப்டம்பர் 10ம் தேதிக்குள் இறுதி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close