ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?- தமிழருவி மணியன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jul, 2018 08:09 pm

will-rajini-come-to-politics-or-not-answered-tamizharuvi-manian

எப்போதும் படப்பிடிப்பு படப்பிடிப்பு என வெளியில் சுற்றுக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் முழுநேர அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது பல பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.

பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு “ஆன்மிக அரசியலில் நான்” எனக்கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சரி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதுசு இல்ல இனி நடிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டு தீவிர அரசியலை முன்னெடுப்பார் என எதிர்பாக்கப்பட்ட தருணத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து அரசியல் வேலைகளை தொடங்கினார். அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் என்னதான் அரசியலையும், ஆன்மீகத்தையும் கையில் எடுத்தாலும் நடிக்காமலாம் நான் இருக்க மாட்டேன் என அதிரடியாக நடிப்பில் நடைபயணத்தை தொடர்ந்தார்.  

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், ரஜினிகாந்த் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து தற்போதுதான் தமிழகம் வந்துள்ளார்.ரஜினி, மீண்டும் 5 நாட்கள் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளார். அந்த படம் முடிந்த பின்னர் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளார். தனது மக்கள் மன்றம் மூலம் 1 வாக்குச்சாவடிக்கு 30 பேரை நியமனம் செய்து உள்ளார். அந்த பணிகள் 80% முடிந்துள்ளது. ரஜினி தன் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை கண்டிப்பாக எதிர்கொள்வார். 8 மாதம் அவகாசம் உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துவரும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக வருவார். அதில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close