• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

Breaking: காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி

  Newstm News Desk   | Last Modified : 12 Jul, 2018 05:17 pm

hc-judge-about-weekly-off-of-police-department

காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தி உள்ளார்.

காவலர்களின் பணிசுமை குறைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்  வந்தது. அதில் காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அளிப்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "முன்னரே வார விடுப்பு தொடர்பான விதிமுறைகள் உள்ளன. அதற்கேற்றார் போல போலீசாருக்கு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சுழற்சி முறையில் வழங்கப்படுவதால் வெளியே தெரிவதில்லை" என்றார். 

பின் பேசிய நீதிமதி,"வார இருப்பு ஆவணங்ளில் மட்டுமே உள்ளது. ஆனால் நடைமுறையில் இல்லை. விடுப்பு நாட்களில் கூட காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றனர்" என்றார். மனுதாரர் தரப்பிலும் இதே குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

மேலும் வார விடுப்பு நாட்களில் வேலைக்கு வந்தால் ஒரு நாளைக்கு ரூ.200 கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த முறையை நிறுத்த முடியமா?. "ஒரு மாதத்தில் 4 நாட்கள் விடுப்பு அன்று பணிக்கு வந்தால் ரூ. 800 வரை கிடைக்கும் என்பதால் அவர்கள் விடுப்பு எடுப்பதில்லை. வாரத்தில் ஒருநாள் அவர்கள் கட்டாய விடுப்பு எடுக்க வேண்டும். மாதத்தில் ஒரு நாள் அவசரம் என்றால் அந்த நாட்களில் பணிக்கு அனுப்பலாம். ஒரு நாள் ஆவது அவர்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டு" என்றார். 

மேலும் இதுகுறித்து வரம் ஜூலை 19ம் தேதிக்கும் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close