கள்ளக் காதலைத் தடுக்க சட்டம் அவசியம் - உச்ச நீதிமன்றம் கருத்து

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Jul, 2018 06:44 am
section-497-adultery-must-remain-a-crime-to-protect-the-institution-of-marriage-centre-tells-supreme-court

கணவனை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் இருக்கும் பெண்களை தண்டிக்கும் உரிமை இந்திய சட்டத்தில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. அதுவே பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 11 பக்க பதில் மனுவில், "கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும். கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாதநிலை உள்ளது. ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐபிசி 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், "திருமணமான பெண்ணுடன்  வேறு ஒரு ஆண் பழகுவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆணுக்கு மட்டும் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இதே குற்றத்தை செய்த பெண்ணுக்கு அந்த 5 ஆண்டுகள் தண்டனையை வழங்க முடியாது என சட்டத்தில்" என்றார்.

மேலும் "கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்கள் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்படப்படவில்லை.எனவே கள்ளக்காதலில் ஈடுப்படும் பெண்களுக்கு தண்டனை சட்டம் இல்லை" என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற இந்த சட்டப்பிரிவு அவசியம். அதேநேரத்தில் பெண் உரிமை, ஆண் - பெண் சமநிலை போன்றவற்றை காப்பாற்ற அதில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விசாரணை நடைபெறும். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்கு பதில், இதைவிட அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் நான்றாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதனால், இந்த வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close