ஜெ. மரணம் குறித்து அப்போலோவில் நேரடி விசாரணை - ஆணையம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 03:14 pm
arumugasamy-commission-will-going-to-apollo-hospital-for-final-investigation

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் வருகிற 29ம் தேதி விசாரணை நடத்த இருப்பதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். மேலும் தகவல் தெரிந்தவர்கள் பலர் தங்களது வாக்குமூலங்களை பிரமாணப்பத்திரங்கள் வாயிலாக தாக்கல் செய்துள்ளனர். ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இந்த தகவலை விசாரணை கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். வருகிற 29ம் தேதி மாலை 7 மணிக்கு ஆய்வு மற்றும் விசாரணை தொடங்கும். 45 நிமிடங்கள் ஆய்வு நடத்தப்படும். விசாரணை ஆணையம் சார்பில் வழக்கறிஞர்கள் பார்த்த சாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஆய்வு நடத்த செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close