காதலியை கொன்று தானும் தற்கொலை- இளைஞரின் விபரீத செயல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Jul, 2018 11:24 pm
man-killed-him-lover-and-commit-suicide

காதல் விவகாரம் கடைசியில் மரணத்தில் முடிவது அண்மை காலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

காதல்... கொலை... தற்கொலை!

உயிருக்கு உயிராக காதலித்துவந்த காதலியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதல் கொலையாகி, கொலைக்கு பின் தற்கொலையாக உருவெடுத்துள்ளது. 

நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் சாத்துரை அடுத்த ரெட்டியாப்பட்டியை சேர்ந்த பொன் மகாலட்சுமி- மதன் ஜோடிகள் காதலித்துவந்தனர். பொன். மகாலட்சுமி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துவருகிறார். மதன் அதே பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவருகிறார். இந்நிலையில் ரெட்டியாப்பட்டியில் நடுரோட்டில் இன்று பிற்பகல் மாணவி பொன் மகாலட்சுமியை மதன் கத்தியால் குத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். காயமடைந்த மகாலட்சுமி நிகழ்விடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து வேகமாக தனது வீட்டிற்கு ஓடிய மதன், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். காதலில் ஏற்பட்ட பிரச்னையில் இரு உயிர்கள் பரிபோனது அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close