காவிரியில் வெள்ளப் பெருக்கு!

  திஷா   | Last Modified : 15 Jul, 2018 09:37 am
water-from-the-dams-of-cauvery-river

கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தென்மேற்கு மழை தீவிரமாக பெய்து வருவதால், கர்நாடகா மற்றும் கேரளவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 124.8 அடி கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 123  அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 55,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று கபினி அணியில் இருந்து வினாடிக்கு சுமார் 35,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வரும் தண்ணீர் கனகபுர என்ற இடத்தில் இணைவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close