சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு ரஜினி பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 06:15 pm
rajinikanth-praises-erode-boy-for-his-honesty

சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்.

ரஜினியை பார்க்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று அச்சிறுவன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பேசிய ரஜினி அந்த சிறுவன் என்ன படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் படிக்க வைப்பேன் என்றும் தெரிவித்தார்.

ஈரோட்டில் துணி வியாபாரம் செய்து வரும் பாட்ஷா என்பவரது மகன் முகமது யாசின். சின்ன சேமூர் அரசி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் யாசின், பள்ளி அருகே கிடந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை போலீசில் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் ஒப்படைத்தான்.

இந்நிலையில் சிறுவன் யாசினின் செயல் தமிழக மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட பிள்ளை என சிறுவன் யாசினிற்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் புகழ் மாலை சூட்டினார்.

யாசினின் குடும்ப நிலையை அறிந்து அனைவரும் உதவ முன்வந்த நிலையில், அதை ஏற்காமல் நன்றியை மட்டுமே அவனது குடும்பத்தினர் தெரிவித்தார்கள். அப்போது, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தெரித்திருந்தான்.

இதனையடுத்து ரஜினி அச்சிறுவனை நேரில் அழைத்து பாராட்டினார். போயஸ் இல்லத்திற்கு அழைத்து பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என்றார்.

மேலும், எதிர்காலத்தில் மாணவன் யாசின் என்னவாகோ நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன் என்று கூறிய ரஜினிகாந்த் சிறுவனின் செயலிற்கு பாராட்டுதல் தெரிவித்து அவனுக்கு தங்கச் சங்கலியை பரிசளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

Showing 1 of 7

Advertisement:
[X] Close