இனி ஸ்டாலினை விமர்சிக்க கூடாது..: கட்சியினருக்கு வைகோ அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 10:24 am
dont-criticize-stalin-vaiko-s-request-to-his-party-members

மு.க.ஸ்டாலினை இனி சமூக வலைதளங்களில் விமர்சிக்க கூடாது என்று தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ, இணையதளத்திலோ, வாட்ஸ்ஆப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. 

அப்படிச் செய்பவர்கள் ம.தி.மு.க நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் மதிமுகவினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள் மதிமுகவுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை" என தெரிவித்துள்ளார். வைகோ இந்த அறிக்கையை மலேசியாவில் இருந்து வெளியிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close