சிறுமி வன்கொடுமை: காண்போரை கண்கலங்க வைக்கும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 05:43 pm
11-year-child-rape-case-physically-challenged-people-protest-at-chennai

சென்னையில் 11 வயது  மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று சென்னை தி.நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று(ஜூலை 18) சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜூலை 31ம் தேதி வரை நீதிமன்றக்காவல்அளித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்து கைதான நபர்களை வெளியே கொண்டு வரும்போது, அவர்கள் மீது அங்குள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். சில வழக்கறிஞர்களும் இவர்களை தாக்கியதாக கூறப்பட்டது. மேலும், கைதான 17 பேருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது என வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகே சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கெடுத்துள்ளனர். முக்கியமாக ஏராளமான மாற்றுத்திறனாளி குழந்தைகள் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளது காண்போரை கண்கலங்க வைக்கும் விதத்தில் உள்ளது. ஒன்றுமறியா அந்த குழந்தைகள் பாதுகாப்பு கோரி கையில் பதாகைகளுடன் நிற்கும் காட்சி வழியில் செல்வோர் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 

"சமீபத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளிடம் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்" என கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close