இந்து தெய்வத்தை அவமதித்த தொலைக்காட்சி! ஹெச். ராஜா கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 06:56 pm
h-raja-accusation-on-news-channel

தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் இந்து மதத்தினையும், தெய்வத்தையும் அவமதித்து பேசியதாக ஹெச். ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 

சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமால தெரிவித்தது. வழிபாடு என்பது சட்டம் சார்ந்தது கிடையாது, வழிபாட்டிற்கு ஆண், பெண் வேற்றுமை கிடையாது அவர்களுக்கு உரிமை உண்டு எனவே கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இதுக்குறித்து நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய காலை நேர கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “சபரிமலையில் பெண்கள் - மரபா ? உரிமையா ?” என்ற தலைப்பில் பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி மறுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கூறுகின்றன. பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும் என நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஹெச். ராஜா தனது முகநூல் பக்கத்தில், “நெறியாளர் என்கிற போர்வையில் தொகுப்பாளர் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதை புறந்தள்ள முடியாது.

இவர்கள் முதலில் இந்து பெண்கள் புனிதமாக கருதும் தாலியை இழிவு செய்தனர். தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்று விவாதம் செய்தனர். ஆனால் அந்நிய நாட்டில் தோன்றிய மதத்தின் விழாவை பாதிரியார்களை அழைத்து வந்து பாட்டுப்பாடி கொண்டாடினர். நேற்று இந்து தெய்வங்களை இழிவாக பேசியுள்ளனர். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியின் நிர்வாகத்தின் நிலைப்பாடு தொடர்ந்து இந்து விரோதமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close