இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 21 Jul, 2018 05:10 pm
controversy-apologized-private-tv-presenter

இந்து மதத்தினையும், தெய்வத்தையும் அவமதித்து பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது. வழிபாடு என்பது சட்டம் சார்ந்தது கிடையாது. வழிபாட்டிற்கு ஆண், பெண் வேற்றுமை கிடையாது அவர்களுக்கு உரிமை உண்டு எனவே கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கோயில் நிர்வாகம் உறுதியாக தெரிவித்தது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் “சபரிமலையில் பெண்கள் - மரபா ? உரிமையா ?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. அப்போது, ’பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என கூறுகின்றனர். பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலில் இல்லாமல் எங்கே செல்லும்’’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஹெச். ராஜா தனது முகநூல் பக்கத்தில், “நெறியாளர் என்கிற போர்வையில் தொகுப்பாளர் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியையை தொகுத்து வழங்கிய கார்த்திகேயன் தனது முக நூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரண்டு நாட்களுக்கு முன் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை சிலரின் மனதை காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close