21-07-2018 டாப் 10 செய்திகள்: வெற்றிக்கு அச்சாரம் - அமித்ஷா மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 03:36 pm
21-07-2018-newstm-top-10-news

அமித் ஷா கேட்டதால் ஆதரவு: அமைச்சர் செல்லூர் ராஜு 

அமித்ஷா ஆதரவு கேட்டதால் அ.தி.மு.க எம்.பிக்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், "அமித் ஷா கூறும்போது, தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது என்று தான் கூறினாரே தவிர, அ.தி.மு.க அரசில் ஊழல் என்று கூறவில்லை. தமிழகத்தில் அனைத்து ஊழல்களுக்கு தி.மு.க தான் காரணம்" என்றார். 

சிவாஜி கணேசன் நினைவு தினம்: பிரபு, நாசர் உள்ளிட்டோர் அஞ்சலி!

நடிகர் சிவாஜி கணேசனின் 17ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணி மண்டபத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, "எனது அப்பா இன்னும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரசிகர்கள் இருக்கும் வரை அவரும் நம்முடனே இருப்பார். சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி" என தெரிவித்தார். 

மூக்குடைபட்ட எதிர்கட்சிகள் : எச்.ராஜா ட்வீட்

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததையொட்டி, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,"நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 எதிராக 325. அதாவது வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 23% நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு. 77% எதிர்ப்பு. இதே நிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும். மூக்குடைபட்ட எதிர்கட்சிகள்" என ட்வீட் செய்துள்ளார்.

2019 தேர்தலுக்கான எதிரொலி தான் இந்த வெற்றி: அமித் ஷா பெருமிதம்!

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். அதற்கான எதிரொலி தான் இந்த வெற்றி என பா.ஜ.க தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பட்டம் பெற்று விட்டார் ராகுல் காந்தி: சிவசேனா பாராட்டு!

நேற்று மக்களவையில் ராகுல் பேசியது மற்றும் நடந்துகொண்டதன் மூலம் அவர் அரசியல் பள்ளிக்கூடத்தில் பட்டம் பெற்று விட்டார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். மேலும், "ராகுல் மோடியை கட்டியணைக்கவில்லை. மோடிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். இது போன்று பல்வேறு அதிர்ச்சிகள் அரங்கேறலாம்" என்றார். 

பிரதமர் பொறுப்பற்ற முறையில் பேசுவது  வேதனையளிக்கிறது: சந்திரபாபு நாயுடு

"ஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையளிக்கிறது. மேலும் அவர் ஒரு சுயநலவாதி" என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, "மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அதோடு நிற்காமல் பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்" எனவும் கூறினார். 

டிப்ஸ் இவ்வளவா குடுப்பாங்க... அதிர்ச்சியில் உறைய வைத்த ரொனால்டோ!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ் வழங்கி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார். 

ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

ஒருவேளை மதிய உணவுக்காக ஹோட்டல் பில்லாக 7 லட்சம் செலுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். விசாரித்ததில், இந்தோனேஷிய மதிப்பில் 7 லட்சம் என்பது இந்திய மதிப்பில் ரூ.3300தான் என தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் 149 பேர் பலியான கொடூர தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!

கடந்த 13ம் தேதி பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 149 பேர் பலியாயினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். 

ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேர் மீது மர்ம நபர் கத்திக்குத்து!

ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் திடீரென மற்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக கத்திக்குத்தில் ஈடுபட்டதில் 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம், ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் இருக்கும் ஹீரோ! 

சான்ஸ் தராததால் அறிமுக ஹீரோ ஒருவர், தன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக படவிழாவில் பகிரங்கமாக சொன்னார் இயக்குநர் வெங்கட்பிரபு.  ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஹரி பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் ’பேய் பசி’. சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில்  ஹீரோவாக அறிமுகமாகும் ஹரி தான் தன்மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close