Breaking சேலத்தில் நில அதிர்வு!

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2018 02:13 pm
mild-earthquake-in-salem

சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டது. இதனைத்தொடர்ந்து அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயரும் போது இது போன்று நில அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓமலூர் பகுதியில் நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்பு பலத்த வெடி சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் இன்று ஓமலூர், காடையாம் பட்டி, சேலம் உள்ளிட்ட வட்டங்களில் 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதைப்படிச்சீங்களா?

தோனியின் டாப் 20 உலக சாதனைகள்!

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close