காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்; 4 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:35 am
4-bodies-found-after-a-family-goes-missing-in-cauvery

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சேலம் மாவட்டம் ரெட்டியூரில் வசித்து வரும் கோபால் என்பவரது வீட்டுக்கு அவரது உறவினர் சரவணன் மற்றும் குடும்பத்தினர் விடுமுறைக்காக வந்திருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், மேட்டூர் அணை திறக்கப்பட்டு, நீர் அளவு அதிகரித்துள்ளது. 

ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், காவிரி கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆற்றில் இறங்கிய சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மைதிலி, வாணிஸ்ரீ, ரவீனா, ஹரிஹரன் ஆகியோர் வேகமாக சென்ற ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக தீயணைப்புப் படைவீரர்கள் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்நது நடத்தப்பட்ட தேடுதல் பணிகளில், ஹரிஹரனை தவிர மற்ற 4 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. 

ஹரிஹரனை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close