எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கில் இன்று 3வது நீதிபதி விசாரணை

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 01:45 pm
18-tn-mlas-disqualification-case-third-judge-to-hear-case-today

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 பேரை தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜியும், உத்தரவு செல்லாது என்று சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இந்த மனுவை கடந்த 4ம் தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், இன்று முதல் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். இதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதனை வரும் 27ம் தேதி வரை தினமும் விசாரிக்க உள்ளதாக சத்தியநாராயணன் அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close