எதையும் தாங்கும் இதயம் வேண்டும்: ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 09:07 pm
ops-about-nirmala-sitaraman-snub

டெல்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்ததை தொடர்ந்து, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி விரைந்தார். அங்கு அவர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவை சந்திக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அமித் ஷாவை சந்திக்க முடியாமல் போனதாகவும், அவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதகாவும் கூறப்பட்டது. பின்னர்,  தான் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், அரசியல் சந்திப்பு கிடையாது என்றும் ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓபிஎஸ்-ஸுடன் சென்ற அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்திக்க அமைச்சர் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், ஓபிஎஸ்-ஸை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஓபிஎஸ்-ஸை சந்திக்க அமைச்சர் மறுத்த தகவலுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் இருந்து திரும்பிய ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்திக்கும் போது, "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று மட்டும் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close