செவிலியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! டபுளானது சம்பளம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jul, 2018 06:36 pm
nurse-salary-hike

தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ. 7,700 இல் இருந்து ரூ. 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு 1.4.2018 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்காலிக செவிலியர்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.500 ஊதிய உயர்வாக அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வுடன் இ.எஸ்.ஐ., பி.எப் திட்ட தொகையும் செலுத்தப்படவுள்ளது.  ஊதிய உயர்வால் தொகுப்பூதியம் பெறும் 12000 செவிலியர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close