யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இறந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 11:13 am
tn-woman-dies-after-giving-birth-to-baby-at-home-case-filed-against-3-including-husband

யூடியூப்பில் வீடியோ பார்த்து மனைவிக்கு பிரசவம் செய்து, இறப்பதற்கு காரணமாக இருந்த கணவர் மற்றும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன், பனியன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா அதே பகுதியில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். இவர்களது நண்பர்களான பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யா அதே பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களது மகள் வீட்டிலேயே சுகபிரசவத்தில் பிறந்தவர். கார்த்திகேயன் தம்பதியர்களுக்கு இயற்கை மருத்துவம் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் அவர்களும் தங்களது இரண்டாவது குழந்தையை அப்படியே பெற்றெடுக்க விரும்பி உள்ளனர். இதனையடுத்து இருவரும் யூ டியூப் மூலமாக பல்வேறு சுகப் பிரசவம் குறித்த வீடியோக்களை பார்த்துள்ளனர்.

மேலும் இரண்டாவது குழந்தை உருவானதும்  முதல் மாதம் முதலே எந்தவிதமான மருத்துவமனைக்கும் செல்லாமல் தவிர்த்து வந்துள்ளனர். இதுகுறித்து கிருத்திகாவின் தந்தை சுப்ரமணி பலமுறை வற்புறுத்தியும் கார்த்திகேயன் தம்பதியினர் கட்டாயமாக மறுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி கிருத்திகாவிற்கு பிரசவ வலி  ஏற்பட்டுள்ளது. லாவண்யாவை போனில் அழைத்த கிருத்திகா தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். 

இதனையடுத்து லாவண்யா பிரவீன் தம்பதியினர் மற்றும் கார்த்திகேயன், கார்த்திகேயன் தாயார் காந்திமதி ஆகியோர் கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது கிருத்திகாவிற்கு பெண்  குழந்தை நல்ல விதமாக பிறந்துள்ளது. எனினும்  நஞ்சுக்கொடி வெளியே வராததால் கிருத்திகா  மயக்கமடைந்துள்ளார். இதனால்108 ஆம்புலன்ஸ் மூலம் கிருத்திகாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

கிருத்திகாவின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்த பின்னர் மின்மயானத்தில் எரிப்பதற்கு மருத்துவரின் கடிதம் இல்லாத காரணத்தால் மின் மயானத்தில் எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பிறகு கிருத்திகாவின் தந்தை சுப்ரமணி நல்லூர் ஊரகக் காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்தில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என எழுதிக்கொடுத்துள்ளார் . இதை அடுத்து கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மின் மயானத்தில் எரிக்கப்பட்டது. 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இறந்தவரின் கணவர் கார்த்திகேயன் மற்றும் பிரவீன்- லாவண்யா தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close