கமல்ஹாசன் அரசியல் குறித்து பேச தகுதியற்றவர்: எச்.ராஜா

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 02:50 pm
h-raja-criticizing-kamalhassan-over-his-political-comment

அரசியல் குறித்து பேச கமல்ஹாசனுக்கு தகுதியில்லை என பா.ஜ.க தேசிய செயலர் எச். ராஜா கூறியுள்ளார். 

தேசிய பா.ஜ.க செயலர் எச்.ராஜா இன்று சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கமல்ஹாசன் பரத நாட்டியம் குறித்து வேண்டுமானால் கருத்து சொல்லலாம்.. ஆனால் அரசியல் குறித்து கருத்து சொல்ல அவர் தகுதியற்றவர்" என தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தொடர்ந்து சமீப காலமாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதை அடுத்து, எச். ராஜா இது போன்று தெரிவித்துள்ளார்.  

மேலும் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜா, "பாகிஸ்தான் தேர்தலின் போது இந்தியாவில் மோடி அவர்களின் ஆட்சி போல் இங்கு ஆட்சி தருவேன் என்று பிரச்சாரம் செய்த இம்ரான் கான் முன்னனி" என குறிப்பிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close