செய்தியை மூடு மந்திரமாக வைத்திருப்பதால் வதந்திகள் வரும்- கருணாநிதி சொன்னதை ஸ்டாலின் செய்வாரா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Jul, 2018 07:00 am
if-keeping-the-message-mute-when-the-rumor-coming-says-karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 24 மணி நேரமும் கருணாநிதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்க வேண்டாம். கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது இதேபோன்று வதந்திகள் பரவின. (இன்றுவரை ஜெயலலிதா மரணம் மர்மமாகவே உள்ளது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது.) அப்போது, “அவருடைய உடல்நிலை பற்றிய செய்தியை மூடு மந்திரமாக வைத்திருப்பதால் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதை தடுக்க அவர் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும்” என கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை தற்போது பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் சிகிச்சை போன்று கருணாநிதியின் சிகிச்சையும் மூடு மந்திரமாகவே உள்ளது எனவே கருணாநிதி சொன்னது போன்று வதந்திகளை தடுக்க அவர் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை வெளியிட வேண்டும் என தி.மு.க தொண்டர்கள் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close