சென்னையில் துணை குடியரசு தலைவர்: கருணாநிதியை நலம் விசாரிக்க வருகை

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 09:44 am
venkaiah-naidu-reaches-chennai-to-visit-cauvery-hospital

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க துணை குடியரசு தலைவர் இன்று சென்னை வந்தார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைியல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர் இன்னும் 2, 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிந்துக்கொள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இன்று நண்பகல் 12.30 மணிக்கு அவர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close