ஆன்மீக பூமி பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது- நீதிபதி கிருபாகரன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Jul, 2018 03:29 am
spiritual-earth-sexual-abuse-has-been-earth-says-judge

ஆன்மீக பூமியான இந்த மண் பாலியல் பூமியாகிவிட்டது என நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அறுபது வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன் காணொலி காட்சி மூலம் விசாரணையை நடத்தினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆன்மீக பூமியான இந்த மண் பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது. காம மிருகங்கள், குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு சமூகம் மற்றும் குற்றத்தில் ஈடுபடுபவரின் உளவியல் ரீதியான பிரச்னையே காரணம் எனக்கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close