பிரியாணி இல்லையாம்...ஆத்திரத்தில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய தி.மு.க நிர்வாகி! ட்ரெண்டாகும் #ஓசிபிரியாணிதிமுக

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 04:59 pm
dmk-group-attacked-hotel-servants-for-not-issuing-briyani

பிரியாணி இல்லை என்று கூறிய ஹோட்டல் ஊழியர்களை தனது கும்பலுடன் தி.மு.க நிர்வாகி தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் உணவகம் கடந்த 29ம் தேதி இரவு 9 மணிக்கு மூடப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று பிரியாணி கேட்டு கடைக்கு வந்தனர். பிரியாணி தீர்ந்துவிட்டது என்று ஊழியர்கள் கூறியும், கடையை திறக்க சொல்லி வற்புறுத்தி "நாங்க யாருனு தெரியுமா? எங்களுக்கே பிரியாணி இல்லையா? நாங்க லோக்கல் ஆளுங்க" என்று மிரட்டியுள்ளனர்.

மீண்டும் , 'பிரியாணி இல்லை' என்று ஊழியர்கள் கூறவே, கண்மூடித்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கேஷியருக்கு மூக்கு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், கடையில் இருந்த ஏராளமான பொருட்களும் சேதமடைந்துள்ளது. பின்னர் ஹோட்டல் நிர்வாகம் இது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்ததுடன், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் பிரதிகளும் ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இது இணையத்திலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

பின்னர் விசாரணையில், ஹோட்டல் ஊழியர்களை தாக்கியது சென்னை விருகம்பாக்கம் தி.மு.க மாணவர் அணி நிர்வாகி யுவராஜ் தான்  என்பது தெரிய வந்துள்ளது. காவல்துறை இது தொடர்பாக 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இந்த விஷயத்தை வைத்து ஓசி பிரியாணி தி.மு.க என்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close