சுகப்பிரசவ பயிற்சி: ஹீலர் பாஸ்கர் கைது

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Aug, 2018 07:56 pm
healer-baskar-arrested

வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்த ஹீலர் பாஸ்கர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் அண்மையில் தம்பதியினர் ஒருவர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்ய முயன்றதால் பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வீட்டில் இருந்தே பிரசவம் பார்ப்பதற்கு வருகிற 26ம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வீட்டில் பிரசவம் பார்க்கலாம், தடுப்பூசி வேண்டாம் என பொதுமக்களை ஏமாற்றி பொய் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய மருத்துவர் சங்கம் அளித்த புகாரின் பேரில் ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close