அண்ணா பல்கலை. ஊழல் நிரூபணமானது! அதிகாரி உமா சஸ்பெண்ட்

  முத்துமாரி   | Last Modified : 03 Aug, 2018 01:08 pm
anna-univerisity-scam-update

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுகூட்டலில் ஊழல் நடந்துள்ளது தற்போது நிரூபணமாகியுள்ளதால் முன்னாள் தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளின் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்காக, அவர்களிடமிருந்து அதிக பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உமா உள்பட 10 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 400 கோடி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட உமா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.அன்பழகன் தெரிவித்தார். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close