கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 04:42 pm
4-retired-judges-appointed-for-investigating-society-election-complaints

கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேரை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் கடந்த மே மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதககமாக பணிகள் நடைபெறுகின்றன என ஒரு குற்றச்சாட்டு எழுந்ததுடன், திமுக கொறடா சென்னை உயர் நீதிமன்ற த்தில் ஒரு வழக்கும்தொடர்ந்தார். அதில் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த கோரிக்கைக்கு ஏற்ப, நீதிமன்ற  உத்தரவின்படி அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் அளித்த தடையை நீக்கியத்துடன் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்குமென கூறியது. 

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணை முடிவில், "நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம். கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட் ராமன், ராஜேஸ்வரன், ராமநாதன், ராஜ சூர்யா ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், இணை பதிவாளர்கள்  அடங்கிய ஒரு குழுவை ஒரு வாரத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த குழுவின் விசாரணை அடிப்படையில் தேர்தல் செல்லுமா அல்லது மறுதேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close