கருணாநிதி இறுதிப் பயணத்தை வழி நடத்திய வெள்ளை சுடிதார் ஐ.ஏ.எஸ் அதிகாரி யார்?

  Padmapriya   | Last Modified : 10 Aug, 2018 10:52 am

amudha-ias-special-secretary-in-social-justice-empowerment-prohibition-tamil-nadu

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல பயணத்தில் அனைத்துமாய் நின்று உறுதுணையாய் செயல்பட்ட அமுதா ஐஏஎஸ் வெனகுவான பாராட்டுகளை பெற்றுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது முதிர்வால் உடல் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த நிலையில் ஜூலை  27-ம் தேதி ஆழ்வார்பேட்டை காவேரி மடுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலகட்ட சிகிச்சைகளுக்கு பிறகு பலனளிக்காமல் ஆகஸ்டு 7ம் தேதி மாலை 6.10க்கு மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி மத்திய அரசு தேசிய துக்க தினமாக அனுசரிக்க உத்தரவிட்டது.  அதன்படி அவருக்கு ராணுவ மரியாதை, 7 நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டது.  அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சரத் பவார், தேவகவுடா, மம்தா பானர்ஜி உட்பட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் 4 மணிக்கு அவரது பூத உடல் பீரங்கி வண்டியில் அண்ணா சதுக்கம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு அவர் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி ராணுவ மரியாதை முடித்து அகற்றப்பட்டு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.  குடும்பத்தினர் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியா பின் அவரது உடல் சந்தனப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க  சரியாக 7.10 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிகழ்வுகள் முழுவதிலும் அனைத்துமாய் நின்று மிகச் சீரிய பணியாற்றியவர் அமுதா ஐஏஎஸ்.  மாநிலத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தடை சிறப்பு செயலாளராக உள்ளவர தான் அமுதா. கருணாநிதியின் இறுதி பயண நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இவர்  நியமிக்கப்பட்டு இருந்தார். இறுதி ஊர்வலம் முதல் உடல் அடக்கம் வரை தனது நிர்வாக திறனால் பணியை செம்மையாக செய்து முடித்ததோடு அல்லாமல் கருணாநிதியின் உறவினர்களின் கருத்தறிந்து ஒவ்வொன்றையும் சரியாக செய்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

அதிகாரியாக மட்டும் செயல்படாமல் முழு உணர்வோடும் அவர் பணியாற்றினார் என அவருக்கு பொது மக்கள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சந்தனப்பேழைக்கு மேல் மண் தூவி மறியாதை செலுத்தியபோது, இறுதியாக தானும் ஒரு பிடி அள்ளிப் போட்டது அனைவரையும் குறிப்பிட்டு பேச வைத்துள்ளது. 2015 வெள்ள பாதிப்பின்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பம்பரமாக சுழன்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.