கேரளாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு!

  முத்துமாரி   | Last Modified : 09 Aug, 2018 05:01 pm

ndrf-teams-arrives-kerala-due-to-heavy-rain

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர்  பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோழிக்கோடு, ஆலப்புழா, வயநாடு, இடுக்கி, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருகிலும் நிலச்சரிவிலும் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிட மீட்பு மேலாண்மை அலுவலகம் அறிவித்துள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கனமழையை அடுத்து கேரளாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும், தொடர் கனமழை காரணமாக கேரள அரசு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளது.தேசிய பேரிடர் மீட்புப்படையினரை விரைந்து அனுப்புமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர், தற்போது ஆலப்புழா, கோழிக்கோடு பகுதிகளில் 2 குழுக்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த 3 குழுக்கள் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
[X] Close