டிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

  முத்துமாரி   | Last Modified : 09 Aug, 2018 06:33 pm
contempt-of-court-case-against-traffic-ramasamy

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரி தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக 'மெரினாவில் முன்னாள் முதல்வர்களுக்கு இடமில்லை' என்று கூறிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தி.மு.கவிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறியதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி விமர்சித்தார். இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்த டிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை நீதிபதி(பொறுப்பு) அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அமர்வு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close