இன்னும் சற்று நேரத்தில் வானில் ‘வைர மோதிரம்’ ! நிழல் வேடிக்கையை மிஸ் பண்ணாதீங்க!

  சாரா   | Last Modified : 26 Dec, 2019 09:31 am
a-solar-eclipse-is-coming-this-week-it-creates-the-effect-of-a-diamond-ring

போன வருஷம் சூப்பர் மூன், சூப்பர் மார்ஸ் பார்த்தாச்சு... அதே வரிசையில் போன வருஷம்  ‘சூப்பர் சன்’னும் வந்துச்சு. இப்போ நாளைக்கு வரப் போகிற சூரிய கிரகணம் கூட அரிய சூரிய கிரகணம் தான். இதற்கு கங்கண கிரகணம் மற்றும் வளைய மறைப்பு என்ற பெயரும் உண்டு. 

பொதுவாக அமாவாசை நாளன்று தான் சூரிய கிரகணம் தோன்றும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், நாளைய தினம் அமாவாசைக்கு அடுத்த தினமாக சூரிய கிரகணம் வருகிறது. சூரிய கிரகண முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என நான்கு வகைப்படும்... நாளை  நடக்கவிருப்பது பகுதி கிரகணம்! இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணமாகும். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இந்த சூரிய கிரகணம் நாளை காலை 8.30 மணிக்கு தொடங்கி பகல் 11.30 மணிக்கு முடிவடைகிறது. காலை 9.35 மனிக்கு முழுவதுமாக இருக்கும். அந்த மூன்று நிமிடங்கள் வானத்தில் நிகழும் நிழல் வேடிக்கையைக் கண்டு ரசிக்கலாம்.   இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது சூரியனை சந்திரன் மறைக்கிறது. இதனால் சூரியனின் ஒளி  ‘வைர மோதிரம்’ போன்று பூமியின் தெரியும். அதாவது வானில் ஒரு அற்புதமான வைர ஃப்ளாஷ் அடிக்கவுள்ளது. இந்த அழகான நிகழ்வு சூரிய கிரகணத்தின் போது ஒரு சில விநாடிகள் நீடிக்கும் என்றும் அப்போது சூரியன் பளிச்சென்று செந்நிற வடிவத்தில் தெரியும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close