மக்களே உஷார்! தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  முத்துமாரி   | Last Modified : 09 Aug, 2018 05:40 pm
flood-warning-to-6-districts-of-tamilnadu

கர்நாடகாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் கனஅளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70,000 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாவதால், தமிழக டெல்டா மாவட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுமாறு தமிழக மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், தருமபுரி, திருச்சி ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close