அ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 12:47 pm

high-court-orders-election-commission-to-take-stand-on-admk-chief-secretary-post-case

அ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்னும் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டது. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிரிந்திருந்த இபிஎஸ் -ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா சிறைக்கு சென்றதால், அடுத்து யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. 

தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு கூடி, பொதுச்செயலாளர் என்ற பதவியையே அ.தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த கே.சி.பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close