தி.மு.கவின் அடுத்த தலைவர் யார்? ஆகஸ்ட் 14ல் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்!

  முத்துமாரி   | Last Modified : 10 Aug, 2018 01:29 pm

dmk-meeting-will-be-held-on-aug-14

தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 14ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக  கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, கட்சியின் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக இன்று கட்சியின் செயல் தலைவர்  ஸ்டாலின், மூத்த தலைவர் க.அன்பழகனை கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துப்பேசினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, வருகிற 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் பதவிக்கு யாரை தேர்தெடுப்பது? அவ்வாறு ஸ்டாலினை தேர்தெடுத்தால் தற்போது அவர் வகித்து வரும் செயல் தலைவர், பொருளாளர் பதவி காலியாகும். அந்த பதவிகளுக்கு யாரை நியமிப்பது? என்பது தொடர்பாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close