டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி! குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 10 Aug, 2018 02:15 pm
tnpsc-group-2-exam-notification-released

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் அரசுப்பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி பல்வேறு நிலை தேர்வுகளை நடத்துகிறது. இதில் சார் பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக குரூப் 2 தேர்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட்/செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி அறிவிக்கையில், "வருகிற நவம்பர் 11ம் தேதி தேர்வு நடைபெறும். தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர் 11. தேர்வானது நவம்பர் 11ம் தேதி அன்று காலை 10மணி முதல் 1 மணி வரை நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,119 பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், இந்த குரூப் 2(நேர்முகத்தேர்வு) தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. முதல்நிலைத்தேர்வு தான் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: குறைந்தபட்சம் இளங்கலைப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close