19-08-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 03:38 pm

19-08-2018-top-10-news

இன்றைய நாளுக்கான டாப் 10 செய்திகள்...

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஒரு நற்செய்தி! குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

இந்தாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட்/செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி "தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர் 11. தேர்வானது நவம்பர் 11ம் தேதி அன்று காலை 10மணி முதல் 1 மணி வரை நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாகப் படிக்க...

தி.மு.கவின் அடுத்த தலைவர் யார்? ஆகஸ்ட் 14ல் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்!

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக  கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது மறைவையடுத்து, கட்சியின் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக இன்று கோபாலபுரம் இல்லத்தில் வைத்து கட்சியின் செயல் தலைவர்  ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு, வருகிற 14ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில்  கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்  நடைபெற உள்ளது எனவும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாகப் படிக்க...

கேப், ஷேர் ஆட்டோ வசதி தர சென்னை மெட்ரோ முடிவு!

மெட்ரோ சேவையை அதிக மக்கள் உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மெட்ரோ ரயிலில் செல்பவர்கள், ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு 5 கி.மீ தொலைவுக்குள் செல்ல சைக்கிள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் பயணிகளை அதிகரிக்கும் பொருட்டு, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கேப், ஷேர் ஆட்டோ வசதி தர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை அளிக்க நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. விரிவாகப் படிக்க...

கருணாநிதிக்கு பாரத ரத்னா வேண்டும் - திருச்சி சிவா

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டுமென தி.மு.க எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் ஆதரவளித்துள்ளனர். விரிவாகப் படிக்க...

அ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

அ.தி.மு.கவில் பிரிந்த இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து கே.சி.அன்பழகன் வழங்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்து 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவாகப் படிக்க...

ராஜிவ் கொலை வழக்கு: மத்திய அரசிடம் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை!

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கில்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பது தொடர்பாக மீண்டும் ஒருமுறை மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்துள்ளது. விரிவாகப் படிக்க... 

மெரினாவுக்கு காட்டிய அவசரத்தை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாமே! - கனிமொழி கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவதற்கு தேசிய தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளளார். அதில், "கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி,அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி, வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக்கொண்டிருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க...

கர்நாடக முதல்வர் கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி 

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கன மழை காரணமாக பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

மருத்துவ சிகிச்சைக்காக கோவா முதல்வர் இன்று அமெரிக்கா பயணம்

மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்லும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்,  அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வரும் 17 ஆம் தேதி இந்தியா திரும்பி வர உள்ளார். இதனை முன்னிட்டு நேற்றிரவே மும்பை புறப்பட்ட அவர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.  கணையம்  அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்  மார்ச் - 7ல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஜூன் 14-ல் இந்தியாவுக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க...

கனடா ஓபன்: ஜோகோவிச் தோல்வி; காலிறுதியில் நடால்

டொரண்டோவில் கனடியன் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆடவர் பிரிவு 3-வது சுற்றில், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச்சை 6-3, 6-7 (5/7), 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் கிரீக்கின் ட்ஸிட்ஸிபாஸ். நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், 7-5, 7-6 (7-4) என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை தோற்கடித்தார். காலிறுதி போட்டியில் நடால், குரோவேஷியாவின் மாரின் சிலிக்குடன் மோதுகிறார். மேலும் படிக்க...

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close