கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கிறார் திருநாவுக்கரசர்!

  முத்துமாரி   | Last Modified : 10 Aug, 2018 04:04 pm

tn-congress-leader-thirunavukkarasar-announces-statue-for-karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அறந்தாங்கியில் முழுவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம்  செய்யப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் மறைவினையடுத்து, அவரை கௌரவப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் ஒருவெண்கலச்சிலை நிறுவப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. அதேபோன்று காரைக்காலில் அமையவுள்ள ஒரு புறவழிச்சாலைக்கும்  கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் எனவும்அறிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து,  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் அறந்தாங்கியில் கருணாநிதிக்கு முழுவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என அறிவித்துள்ளார். எனது குடும்பம் மற்றும் அறந்தாங்கி பகுதி மக்கள் சார்பாக இந்த சிலை நிறுவப்படும் என தெரிவித்தார். மேலும், சென்னையின் ஒரு பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா, 'கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
[X] Close