"என்ன இருக்கு உங்களிடம்?" நீதிபதி காட்டம்; திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 08:14 pm
judge-ignores-sedition-charges-on-thirumurugan-gandhi

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நார்வேக்கு சென்றிருந்த அவர், பெங்களூருக்கு திரும்பியவுடன் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சென்னை போலீசார் அங்கிருந்து அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக்கினர். அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. 

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, திருமுருகன் காந்தியை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோரினர். ஆனால், அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லையென நீதிபதி கூறினார். அதற்கான போதிய அறிக்கைகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அவரை காவல் வைத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவரை 24 மணி நேரம் சென்னை சைபர் கிரைம் அதிகாரி விசாரிக்க அனுமதியளித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close