கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார் முதல் மகன் மு.க.முத்து

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2018 03:15 pm
karunanidhi-s-elder-son-pays-tribute

மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியில் அவரின் மூத்த மகன் மு.க.முத்து இன்று அஞ்சலி செலுத்தினார். 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அன்றைய தினம் அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் இணையத்தில் இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மூத்த மகம் மு.க முத்து இன்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் தான் மு.க முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close