ஆதங்கத்துடன் வேண்டினேன்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி!

  முத்துமாரி   | Last Modified : 13 Aug, 2018 11:21 am
mk-alagiri-press-meet-at-marina

கலைஞரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஆதங்கத்துடன் வேண்டிக்கொண்டதாக மு.க. அழகிரி தெரிவித்துள்ளளார்.

தி.மு.க தலைவர்  கருணாநிதியின் சமாதியில், அவரது மகன் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன்  வந்து  அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " நான் ஆதங்கத்துடன் தான் வந்து கலைஞரின் சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள கலைஞரின் விசுவாசிகள் அனைத்தும் என்பக்கம்  தான் உள்ளனர். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்பானது தான். நாளை நடைபெற உள்ள தி.மு.க செயற்குழு கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் தி.மு.கவில் இல்லை. அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்" என்றார்.

தி.மு.கவின் தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து, கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்து பல பேச்சுக்கள் அடிபடுகிறது. தற்போது செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் தான் கட்சியின் அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், மு.க.அழகிரி இவ்வாறு கூறியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close